நடிகர் விஷால் சீரியல்களில் திரைப்படங்களின் பெயர்கள் மற்றும் பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்ற அதிரடியான முடிவு பற்றின தகவலை கூறியிருக்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பல திறமைசாலிகள் உருவாகி இருந்தாலும் பாடல்கள், கதைகள், படத்தின் தலைப்புகள் போன்றவற்றை சுயமாக சிந்திக்காமல் சிலர் மற்ற படங்களில் இருந்து காப்பி அடித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் எழுதப்படும் கதைகளுக்கு அழகான தலைப்புகளை சிந்தித்து வைத்து பெருமை அடைய செய்துள்ளனர். அதனால்தான் அன்றைய காலகட்டத்தில் வெற்றியடைந்த படங்களை அனைவரும் தற்போது வரை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் தற்போது இப்படங்களின் வரலாற்றை சில திரைப்படங்கள் அழித்து வருகின்றது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது அனைத்து குடும்பங்களையும் தன்வசபடுத்தி வருவது சின்னத்திரை மெகா தொடர் சீரியல்கள் தான். அப்போதெல்லாம் ஒரு சில தொலைக்காட்சிகள் மட்டுமே சீரியல்களை வெளியிட்டு வந்தது. ஆனால் இன்று தொலைக்காட்சிகள் என்றாலே சீரியலாக மாறிவிட்டது.

தமிழ் சீரியலில் தமிழ் சார்ந்த குடும்ப கதைகளை இயக்கி வந்த நிலை மாறி தற்போது வடமாநிலங்கள் சீரியல்களை தமிழில் டப் செய்து சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்து வருகின்றனர். அதற்கு திரைப்படங்களின் பெயர்களையும் அதில் வரும் பாடல்களையும் யார் உரிமையும் கேட்காமல் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவில் வெற்றி அடைந்த படங்களின் பெயர்களை சர்வ சாதாரணமாக சீரியல்களுக்கு பயன்படுத்தி அதற்கான மரியாதையை கெடுத்து வருகின்றனர்.

இதனை கண்டித்து தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சீரியல்களில் திரைப்படங்களின் பெயர்களையும், பாடல்களையும் பயன்படுத்தக் கூடாது அதனை மீறினால் அந்த தொலைக்காட்சிகளுக்கு திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் புது படங்களில் டிரைலர்கள், காட்சிகள் எதையும் தர மாட்டோம். மேலும் எங்களிடம் உரிமை கேட்டு நாங்கள் சரி என்று சொன்னால் மட்டுமே திரைப்படங்களின் பெயர்களை பயன்படுத்த முடியும் என்றும் இதுவே ஆரோக்கியமான விஷயமாக தமிழ் சினிமாவிற்கு அமையும் என்று கண்டிப்புடன் விஷால் கூறியுள்ளார். இந்த விஷயம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.