நடிகர் விஷாலின் சமீபத்திய பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஷால். புரட்சித் தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவரது நடிப்பில் அடுத்ததாக மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு திரைக்கு வர இருக்கிறது. வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் விஷால் 34 திரைப்படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் தற்போது தொடங்கி இருக்கும் நிலையில் நேற்று 27-07-2023 இந்திய குடியரசு தலைவரும் விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர். அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார். அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விஷால் அவர்கள் கேட்கப்பட்டிருந்த அரசியல் குறித்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்து இருக்கிறார்.

அதில் அவர், அரசியல் என்பது சமூக சேவை என்றும், வியாபாரம் அல்ல என்றும் கூறியிருந்த விஷால் தான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டதாகவும் அரசியலுக்கு வருவது தனக்கு புதுசு ஒன்றும் கிடையாது என்றும் கூறியிருக்கிறார். மேலும் நடிகர்கள் அரசியல்வாதிகளாவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அரசியல்வாதிகள் நடிகர்களாக நடிக்கும் போது, நடிகர்கள் அரசியல்வாதிகளாவது தப்பு கிடையாது. எல்லா அரசியல்வாதிகளும் சாதி, மதம், எல்லாமே பார்க்கிறார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வருவது மேற்கொண்டு நல்லது பண்ணலாம் என்கிற எண்ணத்தில் தான் என்று தெரிவித்திருக்கிறார். இவரது இந்த பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.