நடிகர் விக்ரம் தனது சமூக வலைதள பக்கத்தில் உடன்பிறப்புகள் மூன்று என குறிப்பிட்டு புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மாபெரும் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் சீயான் விக்ரம். இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதற்கிடையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரம் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருப்பதால் இப்படத்தின் பிரமோஷன் பணிகளிலும் படகுழுவினருடன் இணைந்து தீவிரம் காட்டி வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் விக்ரம் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் -2 படத்தில் ஆதித்த கர்காலனாக நடித்த விக்ரம் கதாப்பாத்திரத்தின் உடன்பிறப்புகளான அருண்மொழி வர்மன் ஜெயம் ரவி, குந்தவை திரிஷா, மற்றும் வந்தியத்தேவன் கார்த்தியுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு உடன்பிறப்புகள் 3, திரையுலும் திரைக்கு வெளியிலும் என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து ட்ரெண்டிங்காகி வருகிறது.