ஜெயம் ரவியை தொடர்ந்து, ‘சீயான்’ விக்ரம் வில்லனாக நடிக்கிறார்..
‘சீயான்’ விக்ரம், மாறுபட்ட தோற்றத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்த விவரம் காண்போம்..
மலையாளத் திரையில் வளர்ந்து வரும் நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் மாஸ் காட்டி வருகிறார் உன்னி முகுந்தன்.
அவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான ‘மார்கோ’ படம் செம வரவேற்பை பெற்று வருகிறது. அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் இப்படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. ஆனாலும், ரசிகர்களை கவரும் அதிக விஷயங்கள் படத்தில் உள்ளதால் கொண்டாடி வருகின்றனர்.
‘மார்கோ’ படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்தப் படத்தின் 2-வது பாகம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், படத்தின் 2-வது பாகத்திற்கான வேலைகள் துவங்கவுள்ளது. 2-வது பாகத்தில் பவர்புல்லான வில்லனாக நடிகர் சீயான் விக்ரம் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வித்தியாசமான கதைக்களங்களில் தன்னை இணைத்துக் கொள்வதில் சிறப்பாக செயல்பட்டுவரும் சீயான், மார்கோ 2-வில் இணைந்தால் அது பெஸ்ட் காம்பினேஷனாக அமையும்’ என கருதப்படுகிறது.
தற்போது ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அருண்குமார் இயக்கியுள்ள நிலையில், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா உள்பட பலர் இணைந்துள்ளனர்.
இச்சூழலில், மார்கோ-2 படத்தில் வில்லனாக விக்ரம் நடிக்கும் பட்சத்தில், தமிழிலும் வெளிவரலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக, சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது படத்தில், ஜெயம் ரவி வில்லனாக நடிக்க கமிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.