பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து ரசிகர்களிடம் ரிவ்யூ கேட்ட விக்ரமின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அவரது கனவு திரைப்படமாக வெளியாகி உள்ள திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, நடிகர் கார்த்தி, சரத்குமார், ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

PS1 பாத்துட்டீங்களா?? விக்ரமின் ரிவ்யூ வீடியோ வைரல்!.

படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாகி இருப்பதால் படம் பற்றிய கதை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

PS1 பாத்துட்டீங்களா?? விக்ரமின் ரிவ்யூ வீடியோ வைரல்!.

இருப்பினும் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்து முடித்து வந்த பின்பு ரசிகர்களிடம் “படம் பாத்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு சொல்லுங்க” என்று ரிவ்யூ கேட்டுள்ளார். அதற்கு ரசிகர்களும் ஆரவாரத்துடன் படம் சூப்பராக இருக்கு என்று பதில் அளித்திருக்கின்றனர். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.