ஜவான் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. சங்கரின் உதவி இயக்குனரான இவர் முதல் படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சினிமாவில் ஷாருக்கானை ஹீரோவாக வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா பிரியாமணி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி முதல் முறையாக பாலிவுட் சினிமாவிலும் வில்லனாக அடி எடுத்து வைத்துள்ளார். மேலும் சாருக்கானுக்கு வில்லனாக நடிக்க அவர் கிட்டத்தட்ட 21 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.