ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் விஜய் பகிர்ந்துள்ள முக்கிய தகவல்கள் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோக்களின் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் இவர் தற்போது லியோ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் விஜய் வரும் சட்டமன்றத் தேர்தலில் மூலம் அரசியலில் களம் இறங்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கேற்றார் போல் விஜய்யும் அரசியல் சார்ந்த பல நல்ல விஷயங்களை மக்களுக்கு தனது இயக்கம் மூலம் செய்து வருகிறார்.

அந்த வகையில் நேற்றைய தினம் சென்னையில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடிகர் விஜய் மேற்கொண்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் அவர் கூறியுள்ள பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதேபோல் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய தகவலாக விஜய் பகிர்ந்து உள்ள சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர், “தான் அரசியலில் ஈடுபட்டால் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும் மக்களுக்கிடையே தனக்கு இருக்கும் ஆதரவையும், வரவேற்பையும் பார்ப்பதற்காக தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்”. தற்போது இந்த புதிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.