தளபதி விஜய் அவர்கள் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே ஆகியோரின் நடிப்பில் ஜவான் திரைப்படம் உருவாகியுள்ளது. மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து முன்னோட்ட வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் இப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பகிர்ந்திருக்கும் தகவல் ஒன்று இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

அதாவது, ஜவான் படத்தில் பணியாற்றி இருக்கும் ஹாலிவுட் புகழ் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென் அளித்திருக்கும் பேட்டியில் தளபதி விஜய் நடிப்பதை உறுதி செய்து இருக்கிறார். மேலும் அதில், ஷாருக் மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து ஒரு சண்டை காட்சியில் நடித்திருப்பதாகவும் அந்தக் காட்சி நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.