புதிய படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் சூரி, இயக்குனர் யார் தெரியுமா?
புதிய படத்தின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் நடிகர் சூரி.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாஸ் காட்டி வருபவர் சூரி. இவரது நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. நேற்று இந்த படத்தின் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் சூரி திருச்செந்தூர் முருகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில், விடுதலை பாகம் 2 குறித்து கேட்டபோது விடுதலை ஒன்று உங்களுக்கு எப்படி பிடித்தது அதே மாதிரி விடுதலை 2 இருக்கும்னு நினைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
இந்தப் படத்திற்குப் பிறகு விலங்கு வெப் சீரிஸ் இயக்கிய இயக்குனர் பிரசாந்த் இயக்கத்திலும், கருடன் படத்தின் ப்ரொடியூசர் கே.குமார் தயாரிப்பிலும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அப்டேட் கொடுத்துள்ளார்.
அதன் பிறகும் வெற்றிமாறன் சார் பங்களிப்பில் அடுத்து ஒரு அப்டேட் வரவும் வாய்ப்பு இருக்கு என்று சொல்லி இருக்கிறார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.