நடிகர் சிவகார்த்திகேயனின் ஃபேமிலி போட்டோ ஷூட் புகைப்படங்கள் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் மாஸ் காட்டி வரும் இவரது நடிப்பில் வரும் 14ஆம் தேதி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் அதிதி சங்கர்
கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் மற்றும் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. தற்போது இப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு தனது மனைவி ஆரத்தி மகள் ஆராதனா மற்றும் மகன் குகன் தாஸ் ஆகியோருடன் இணைந்து எடுத்திருக்கும் க்யூட்டான போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.