சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Web Ads

மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க முடிவெடுத்துள்ளார் சந்தானம். அவ்வகையில், சிம்புவுடன் சந்தானம் இணைகிறாரா? என்ற தகவல் பார்ப்போம்..

சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தில் அறிமுகமான சந்தானம், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியானார். பின்னர், ஹுரோவாக மட்டும் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில், அவர் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் வரும் மே 16-ந்தேதி ரிலீஸாகிறது.

‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திலும் கமிட்டாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க சந்தானம் அதிகபட்சமாக 12 கோடி வரை சம்பளம் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Web Ad 2

சந்தானம் ஹீரோவாக நடித்து வந்த படங்கள் தொடர்ந்து சொதப்பிய நிலையில், விஷால் நடிப்பில் வெளியான ‘மத கஜ ராஜா’ திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இதனால், மீண்டும் சந்தானத்தின் மார்க்கெட் உயர்ந்திருப்பதாக கூறுகின்றனர்.

சிம்புவுக்கு பெரிய வெற்றி வேண்டும் என்கிற நிலையில், சந்தானம் கேட்கும் தொகையை கொடுத்து, அவரை புக் செய்ய முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

actor simbu movie join in santhanan salary