Actor Senthil Family Admitted in Hospital

குடும்பத்தோடு நடிகர் செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Actor Senthil Family Admitted in Hospital : சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் முதல் அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அதன்பின்னர் குறைந்த நிலையில் தற்போது இரண்டாவது அலை பரவி வருகிறது.

மக்கள், திரையுலகப் பிரபலங்கள் என பலரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் செந்தில், அவருடைய மனைவி, மகன், மருமகள் என அனைவருக்கும் கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் செந்தில் குடும்பத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.