வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிக மிகப் பிரபல தமிழ் நடிகர் மரணம் அடைந்துள்ளார்.

Actor Nedumudi Venu Passes Away : தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிரபல வில்லன் நடிகராக நடித்து வந்தவர் நெடுமுடி வேணு. மலையாள திரையுலகைச் சார்ந்த நடிகரான இவர் தமிழில் மோகமுள், இந்தியன், அன்னியன் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வுப் பணி : கனிமொழி தொடங்கி வைத்தார்

தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தற்போது இவருக்கு 73 வயதாகிறது.

கடைசியா Vivek Sir என்கிட்ட இதான் சொன்னாரு – மேடையில் கண்கலங்கிய Sundar C | Aranmanai 3 Press Meet

மிகப் பிரபல நடிகராக வலம் வந்த நெடுமுடி வேணு மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் மீண்டும் முறை தேசிய விருதையும் பலமுறை கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.