Actor Nakhul Upcoming Movie Update

7 ஆண்டுகளுக்கு பிறகு நகுல் மீண்டும் பாடகர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Nakhul Upcoming Movie Update : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நகுல். பிரபல நடிகையான தேவயானியின் தம்பியான இவர் தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார்.

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நாயகனாக நடித்தார். பாடகராகவும் பல படங்களில் பாடி வந்தார். இவருடைய படங்கள் தொடர்ந்து பிரச்சினையை சந்தித்து வந்ததால் பாடுவதை நிறுத்தி விட்டார்.

7 ஆண்டுகள் பாடாமல் இருந்த நகுல் தற்போது தான் நடிக்கும் புதிய படம் ஒன்றில் பாட உள்ளார். அறிமுக இயக்குனர் சக்ஷன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். ரசிகர்கள் கோரிக்கையை ஏற்று நகுல் இந்த படத்தில் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.