கில்லி, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் கொரானாவால் பலியானது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Actor Maran Passes Away : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் நாளுக்கு நாள் எக்கசக்கமான மக்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கில்லி, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் கொரானாவால் பலி - ரசிகர்கள் அதிர்ச்சி

கொரானா வைரஸால் தமிழ் திரையுலகில் தொடர்ந்து பல பிரபலங்களை நாம் பலி கொடுத்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது கில்லி, வேட்டைக்காரன், ஏழுமலை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகரும் ஸ்டண்ட் கலைஞருமான மாறன் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது 48 வயதாகும் இவர் கொரானாவுக்கு பலியானது திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.