தன்னுடைய மகனுக்கு முருகனின் பெயரை வைத்திருக்கிறார் கார்த்தி.
Actor Karthi Son Name : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனான இவர் பருத்தி வீரன் என்ற திரைப்படமாக திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தான் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருந்தது. தற்போது தன்னுடைய குழந்தைக்கு முருகனின் பெயரான கந்தன் என பெயர் சூட்டி இருப்பதாக கார்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் கடவுளான முருகனின் பெயரை சூட்டிய நடிகர் கார்த்திக்கு தமிழ் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக “கந்தன்” என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன் அப்பா என தெரிவித்துள்ளார்.