படத்தின் ஹீரோ நானல்ல, இயக்குநர்: நடிகர் ஜீவா பெருமிதம்..

Web Ads

‘தலைவர் தம்பி தலைமையில்’ பட வெற்றி விழா நிகழ்வுகள் பற்றிக் காண்போம்..

கதை​யின் நாயக​னாக ஜீவா நடித்​துள்ள ‘தலைவர் தம்பி தலைமை​யில்’ படம் ஜனவரி 15-ந்தேதி வெளி​யானது. இதில் தம்பி ராமை​யா, இளவரசு, பிரார்த்​த​னா, ஜெய்​வந்த், ஜென்​சன் திவாகர் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். நிதேஷ் சகாதேவ் இயக்​கிய இப்​படத்தை கண்​ணன் ரவி குழு​மம் சார்​பில் கண்​ணன் ரவி தயாரித்​துள்​ளார். தீபக் ரவி இணை தயாரிப்பு செய்​துள்ள இப்​படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்து இதன் வெற்​றி​விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. விழாவில் ஜீவா பேசும்​போது,

‘நாங்​கள் கடந்த 4, 5 மாதங்​களாகக் குமுளி​யில் ஒரு குடும்​ப​மாகத் தங்கி இப்​படத்தை எடுத்​தோம். அங்​கிருந்த மக்​கள் கிடா வெட்​டிச் சாமி கும்​பிட்​டு, இந்​தப் படம் வெற்றி அடை​யும் என்று வாழ்த்​தி​னார்​கள். படப்​பிடிப்பு முடிந்து கிளம்​பும்​போது, கண்​கலங்கி வழியனுப்பி வைத்​தார்​கள். இதன் வெற்​றிக்கு அவர்​களின் அன்​பும் முக்​கிய காரணம்.

இயக்​குநர் நிதேஷ் சகாதேவ்​தான் இந்​தப் படத்​தின் உண்​மை​யான ஹீரோ. ஒவ்வொரு நடிகரிடமிருந்​தும் நடிப்பை வெளிக்​கொண்டு வந்​து, காட்​சிகளை அவ்​வப்​போது மெரு​கேற்​றி​னார். ஒரு நடிக​ராக எனக்​குத் தமிழில் ஒரு பெரிய வெற்​றியை இப்​படம் மூலம் கொடுத்​திருக்​கிறார். நடிகர் வி.டி.​வி.கணேஷ்​தான் இந்​தக் கதையை சிபாரிசு செய்​தார். தயாரிப்​பாளர் கண்​ணன் ரவியைச் சந்​தித்​தோம். அப்​போதே அட்​வான்ஸ் கொடுத்​தார். அந்த நம்பிக்​கை ​தான் இன்று வெற்​றி​யாக மாறியிருக்​கிறது’ என தெரிவித்துள்ளார்.

இவ்​விழா​வில் தனது மகனை மேடை​யில் அறி​முகப்​படுத்​தி​னார் ஜீவா. அவருடைய புகைப்​படம்​ சமூக வலை​தளங்​களில்​ தற்போது பரவி வருகிறது. அவ்வகையில், சௌத்ரி சார் பேரன் இளம் நாயகனாக அறிமுகமாக உள்ளார் என கணிக்கப்படுகிறது.

actor jeeva in thalaivar thambi thalaimaiyil movie success meet
actor jeeva in thalaivar thambi thalaimaiyil movie success meet