சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் ரசிகர்களிடம் கண்ணீர் மல்க தனது வேதனையை தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த திரைப்படம் நான்கு நாளில் 30 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து படத்தை பார்க்க திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருந்து வருகிறது. இந்த படத்தை மக்களிடம் பெரிய அளவில் கொண்டு சேர்த்ததில் மிகவும் முக்கியமானவராக திகழ்பவர்தான் கூல் சுரேஷ் இவர் தமிழ் சினிமாவில் பிரபல காமெடியன் மற்றும் வில்லனாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்.

என்ன பற்றி ஏன் இப்படி கூறுகிறீர்கள்!!… கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ்!.

இவர் தீவிரமான சிம்பு ரசிகர் என்பதால் ஒவ்வொரு படங்களுக்கும் ரிவ்யூ கொடுத்த பின் சிம்புவின் டைட்டிலை வைத்து டயலாக் பேசி பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆனார். இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷ் திடீரென்று கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாகி இருக்கிறார்.

என்ன பற்றி ஏன் இப்படி கூறுகிறீர்கள்!!… கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ்!.

அதில் அவர், நான் சமூக வலைதளங்களில் இவ்வளவு பிரபலமாக இருந்தாலும் நான் வீட்டு வாடகை கட்ட முடியாமல், வாகனத்துக்கு டியூ கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன் என்று பேசியுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிரான தாக்குதல் குறித்து பேசி அவர், “நான் உங்களை சந்தோஷப்படுத்த தானே பேசுகிறேன் என்னை ஏன் அடிக்க வேண்டும், உதைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்” என்று கண்ணீர் மல்க அந்த வீடியோவில் தனது வேதனையை தெரிவித்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.