தயாரிப்பாளர் தில் ராஜூ போல் பேசி அனைவரையும் சிரிக்க வைத்த சிரஞ்சீவியின்
ப்ரோமோஷன் வீடியோ வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிரஞ்சீவி. மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் வரும் 11ஆம் தேதி ‘போலா சங்கர்’ திரைப்படம் வெளியாக உள்ளது. தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கும் இப்படம் தமிழில் ஏற்கனவே வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த அஜித்தின் ‘வேதாளம்’ திரைப்படத்தின் ரீமேக்காகும்.

தற்போது இப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்று நடிகர் சிரஞ்சீவி ‘போலா சங்கர்’ படக்குழுவினருடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிரஞ்சீவி “ஃபைட் வேண்டுமா ஃபைட் இருக்கு, சென்டிமென்ட் வேண்டுமா சென்டிமென்ட் இருக்கு, டான்ஸ் வேண்டுமா டான்ஸ் இருக்கு, கிளாமர் வேண்டுமா கிளாமர் இருக்கு” என வாரிசு படத்திற்கு தயாரிப்பாளர் தில்ராஜு பேசியது போல் பேசி காண்பித்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். அதன் வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.