கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வரும் நடிகர் பப்லு இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். இது குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் பப்லு என்கின்ற பிரித்விராஜ். தமிழ் ,தெலுங்கு மொழிகளில் பல வெற்றி படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற தொடரில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

57 வயதில் இரண்டாவது திருமணம் செய்த கண்ணான கண்ணே சீரியல் நடிகர் - மணப்பெண் யார் தெரியுமா?

இவர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் ஆட்டிசம் பாதித்த தனது 25 வயதான மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் 57 வயதை நிரம்பி இருக்கும் பப்லு மலேசியாவை சேர்ந்த 23 வயதான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

57 வயதில் இரண்டாவது திருமணம் செய்த கண்ணான கண்ணே சீரியல் நடிகர் - மணப்பெண் யார் தெரியுமா?