Actor Arjai Joined in Annaatthe
Actor Arjai Joined in Annaatthe

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில் இளம் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

Actor Arjai Joined in Annaatthe : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதிஷ், சூரி என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

தற்போது இவர்களுடன் இளம் நடிகரான அர்ஜெய் என்பவரும் இணைந்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் என்னுடைய பெயர் அர்ஜெய். நான் பழனியில் பிறந்தேன். நான் வியந்து பார்த்த இரண்டு விஷயங்கள் ஒன்று தண்டாயுதபாணி முருகன் இன்னொன்று ருத்ராட்சம்.

நான் குடிப்பேன் தான் எனக்கு நீ எப்ப சரக்கு வாங்கி கொடுத்த?? திரௌபதி இயக்குநரை நார்நாராகக் கிழித்த நடிகை!

ருத்ராட்சம் ரஜினியிடமிருந்து அனைவருக்கும் பரிச்சயம் ஆனது. அப்படிப்பட்ட மனிதரை நான் சினிமாவுக்காக சென்னையில் கால் எடுத்து வைத்ததில் இருந்தே பார்க்க முடியாத தூரத்தில் இருந்து பார்த்து ரசித்து வருகிறேன்.

தற்போது முருகனின் அருளால் அவருடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பை பார்த்த ரஜினி ரசிகர்கள் தலைவரை நாங்கள் கேட்டதாக சொல்லுங்கள் என கமெண்ட்டுகளில் கூறி வருகின்றனர்.

https://twitter.com/Rangarajinism01/status/1286264581212405760?s=19