அஜித் 64 படத்தின் தயாரிப்பாளர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்.!!
அஜித் 64 படத்தின் தயாரிப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் போவது என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
மீண்டும் இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது குட் பேட் அக்லி படத்தை விநியோகம் செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தான் ஏகே 64 படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
