தொப்பைக்கே தனி லக்கேஜ் போட்டுருப்பாங்க போல என அஜித்தை கலாய்த்து சர்ச்சையில் சிக்கி உள்ளார் வலைப்பேச்சு அந்தணன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் நதியின் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு. இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இதற்காக ஓவராக ஒர்க்அவுட் செய்து அஜித் ஸ்லிம்மாக மாறி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் அஜித் ஏர்போர்ட்டில் நடந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோவை பற்றி வலைப்பேச்சு அந்தணன் முகநூல் பக்கத்தில் அஜித் தினமும் வொர்க் அவுட் செய்து ஸ்லிம் ஆகி வருகிறார் என்று சொன்னார்கள், ஆனா இந்த வீடியோவை பார்த்தா தொப்பைக்கே தனி லக்கேஜ் போட்டு இருப்பாங்க போலயே என கலாய்த்து பதிவு செய்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அஜித் ரசிகர்கள் பலரும் அந்தணனை விமர்சனம் செய்து வருகின்றனர்.