15 வருடங்களுக்கு பிறகு ‘தல’ அஜித்தின் கார் பந்தயம் தெறிக்கட்டும்: ரசிகர்கள் உற்சாகம்..
‘தல’ அஜித், சுமார் 15 வருடங்களுக்கு பிறகு கார் ரேஸிங்கில் கலந்து கொள்கிறார். இது குறித்த தகவல்கள் வருமாறு:
அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படம் விரைவில் முடிவடைந்து பொங்கல் வெளியீடாக கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில், அஜித் ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருக்கும் கார் ரேஸில் கலந்துகொள்ள இருக்கின்றார். அதற்காக, தற்போது அஜித் ஒருபக்கம் தீவிரமாக தயாராகி வருகின்றார்.
தற்போது, கார் ரேஸில் அஜித்தின் டீம் பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி செம ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அதில், அஜித் செம ஸ்டைலாக அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களில் காணப்படுகின்றார். முக்கியமாக அஜித் மிகவும் சந்தோஷத்துடன் அந்த புகைப்படங்களில் காணப்படுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஸ்பெயினில் நடைபெறும் பந்தயம் மற்றும் அடுத்த வருடம் துபாயில் நடைபெறவுள்ள பந்தயங்களில் அஜித் கலந்துகொள்ள இருக்கின்றார். இதற்கு முன்பு இந்தியளவில் நடைபெற்ற பல கார் பந்தயங்களில் அஜித் கலந்துகொண்டுள்ளார்.
மேலும் ஜெர்மனி, மலேசியா போன்ற நாடுகளில் நடந்த கார் பந்தயங்களிலும் அஜித் கலந்துகொண்டுள்ளார்.
இதையடுத்து சுமார் 15 வருடங்கள் கழித்து அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள இருப்பது அனைவரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
‘திரைத்துறையில் அஜித் வெற்றிக்கொடி நாட்டியது போல, கார் பந்தயத்திலும் அஜித் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்’ என ரசிகர்களும் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்களும் வெளியிடும் எண்ணங்கள் இணையமெங்கும் தெறித்து வருகிறது.