பிக் பாஸ் ஜூலி ஐ லவ் யூ என கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரபலம் ஒருவர்.

Abhirami Loves to Julie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று தன்னுடைய பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டவர் ஜூலி என்கிற ஜூலியானா.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் அதிகம் வெறுக்கப்படும் நபராக இருந்து வந்த ஜூலி பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி மூலம் அதனை முற்றிலுமாக அப்படியே தலைகீழாக மாற்றி போட்டு உள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். முதல் மூன்று இடங்களில் ஒருவராக வருவதற்கு எல்லாத் தகுதியும் உடைய நபராக ஜூலி பிக் பாஸ் வீட்டில் வலம் வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது நிகழ்ச்சி முடிந்த நிலையில் பிக் பாஸ் அபிராமி ஜூலியோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு என்னுடைய எனர்ஜி பூஸ்டர் என குறிப்பிட்டு ஜூலிக்கு ஐ லவ் யூ என கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CcPfz76DUz8/?utm_source=ig_web_copy_link
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.