விரைவில் முடிவுக்கு வரப்போகும் பிரபல சன் டிவி சீரியல்.. ரசிகர்கள் அதிர்ச்சி.!!
விரைவில் பிரபல சன் டிவி சீரியல் ஒன்று முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கான தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர். ஏற்கனவே டிஆர்பிஇல் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இடையே போட்டி அதிகமாக இருந்து வருகிறது.
ஏற்கனவே விஜய் டிவியில் பொன்னி சீரியல் முடிவுக்கு வந்தது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திருந்த நிலையில் தற்போது சன் டிவி சீரியல் முடிவுக்கு வரப்போவதும் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த செவ்வந்தி சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் செவ்வந்தி சீரியல் ரசிகர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
