கூலி படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடி தெரியுமா?
கூலி படத்தின் OTT உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது இந்த படத்தின் OTT உரிமையை அமேசான் நிறுவனம் 120 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
