திருமணம் படத்தை தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை.. பாரபட்சம் பார்ப்பதாக இயக்குனர் சேரன் வேதனை.!!

Web Ads

திருமணம் படத்தை தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை என சேரன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

Selection committee did not find the film Thirumanam Director Cheran Angam.!!
Selection committee did not find the film Thirumanam Director Cheran Angam.!!

2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருமணம் இயக்குனர் சேரன் எழுதி இயக்கி நடித்த இந்தப் படத்தில் உமாபதி ராமையா, காவியா சுரேஷ், தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், சுகன்யா ,மனோபாலா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

திருமணத்தின் போது ஏற்படும் செலவை எவ்வாறெல்லாம் குறைக்கலாம் என்பதை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் மாநில அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தங்களை சார்ந்தவர்களுக்கு மட்டுமே விருதுகளை அறிவிக்கும் நிலை உள்ளதாக சேரன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

சிக்கனமான வாழ்க்கையை மையப்படுத்தி தான் இயக்கிய திருமணம் படத்தை தேர்வு குழு கண்டுகொள்ளாதது வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக நடித்த அஸ்வந்த் ராசுகுட்டி கதாபாத்திரத்திற்கும், மை டியர் பூதம் படத்துக்காகவும் விருது கொடுக்காததால் வேதனையுடன் பதிவு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Selection committee did not find the film Thirumanam Director Cheran Angam.!!
Selection committee did not find the film Thirumanam Director Cheran Angam.!!