‘பிக்பாஸ்’ ஸ்டுடியோவை மூட, அரசு அதிரடி உத்தரவு..

மனித உணர்வுகளை சீண்டும் கேம்ஷோவாக பிக்பாஸ் அமைந்துள்ளது. இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கிறது. இருப்பினும் பணத்திற்காகவும் மேலும், பிரபலம் ஆவதற்காகவும் இத்தகைய ஷோக்கள் பல மாநிலங்களில் தொடர்கின்றன. பார்வையாளர்களுக்கு வேடிக்கையாய் பொழுது போகிறது. இது சரியா தவறா என்பதும் விவாதத்திற்கு உரியதாகிறது.
இவ்வாறு தமிழ், கன்னடா, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடைபெறும் ’பிக்பாஸ்’ எனப்படும் ’ரியாலிட்டி ஷோ’ நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகைகள், வலைதள பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். இதனிடையே, கர்நாடகாவிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக உள்ளது.
அந்த மாநிலத்தில் நடிகர் கிச்சா சுதீப் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடானி பகுதியில் பிரமாண்ட ஸ்டுடியோ அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் ஸ்டுடியோவை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தண்ணீர், காற்று மாசு தொடர்பான உரிய அனுமதியைப் பெறாமல் ஸ்டுடியோ அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஸ்டுடியோவை உடனடியாக மூட மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
