லோகேஷ் அடுத்து இயக்குவது ரஜினி-கமல் இணையும் படமா? கைதி-2 படமா?

கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராகவிருந்த கைதி-2 படம் கண்டிப்பாக நடக்கும் என சொல்லப்படுகின்றது.
தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் விரைவில் கைதி-2 படம் துவங்கும். லோகேஷ் சம்பள விஷயத்திலும் படத்தின் பட்ஜெட்டிலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினி-கமல் படத்தை இயக்குவாரா? இல்லை, கைதி-2 படத்தை இயக்குவாரா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது. ஆனால், கண்டிப்பாக கைதி-2 படம் நடக்கும் என்பது உறுதியாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் ரஜினி -கமல் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குவார் என்றால், அதன்பிறகு கைதி-2 நடக்குமா? இல்லை, அதற்கு முன்னதாகவே கைதி-2 படத்தை லோகேஷ் முடித்துவிடுவாரா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தற்போது லோகேஷ் ரஜினி-கமல் படத்தின் கதை விவாதத்தில் பிஸியாக இருக்கின்றார் என தகவல்கள் வருகின்றது. இது பற்றி உறுதியான தகவல் வரவில்லை.
ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. மாபெரும் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கடும் விமர்சனங்களையே சந்தித்தது. இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் லோகேஷ் கனகராஜ், தனது அடுத்த படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைப்பார் என தெரிகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.!
