நந்தினி இடம் கையெழுத்து வாங்கிய சுந்தரவல்லி, சூர்யாவிட்ட சவால், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையின் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் எப்போதுமே ஜாலியா இரு ஜாலியா இருக்கிறது என்றால் என்ன என்று சொல்லு என கேட்க பூ வச்சுக்கிறது மருதாணி வைத்துக்கொள்வது என்று சொல்லுகிறார். உனக்கு விஜயகாந்த் படம் எல்லாம் ரொம்ப பிடிக்கும் அப்படித்தானே என்று சொல்ல, ஆமா சார் என்று சொல்லுகிறார் அப்போ டெய்லியும் படம் பாரு என்று சொல்ல சரி நான் வேலையெல்லாம் முடிச்சிட்டு பார்க்கிறேன் என்று சொல்ல உன்னை ஒன்னும் சொல்ல முடியாது என்று வேலையை பாரு என்று அனுப்பி விடுகிறார். நந்தினி துணியை எடுத்துக்கொண்டு போகும் போது சூர்யா நியூஸ் பேப்பரில் இருந்து கிழித்த துண்டு பேப்பர் படிக்கட்டில் விழுந்து விடுகிறது. மாதவியும் அசோகனும் வர மாதவி அதை எடுத்து படித்து ஷாக் ஆகி ரூமுக்கு வந்து பேசுகின்றனர். சூர்யா அடுத்த ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டான் நந்தினியை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண போறான் என்று சொல்ல அசோகன் இதுக்கு தான் என்கிட்ட நியூஸ் பேப்பர் படிக்க விடாமல் புடுங்கி விட்டானா என்று கேட்கிறார். இதை உடனே அம்மா கிட்ட சொல்லி ஆகணும்னு மாதிரி சுந்தரவல்லிக்கு போன் போட்டு ரூமுக்கு வரச் சொல்லி கூப்பிடுகிறார்.
உங்க பையன் சூர்யா என்ன பண்ணி இருக்கான் தெரியுமா நீங்களே படிச்சு பாருங்க என்று சொல்லி நியூஸ் பேப்பரை காட்டுகின்றனர். நம்ம வீட்டுக்கு வர பேப்பரை மட்டும் நிறுத்திட்டா எனக்கு தெரியாதுன்னு நெனச்சிட்டானா என்று கோபப்பட மாதவி இவன் எதற்காக இப்படி பண்ணி இருப்பான் என்று கேட்க எல்லாம் என்ன வெறுப்பேத்த தான் என்று சொல்லுகிறார். நீங்கள் இதை நிறுத்த என்ன மா பிளான் பண்ணி இருக்கீங்க என்ன பண்ணனும்னு சொல்லுங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்ல எதுவும் பண்ண வேணாம் நடக்கிறதை வேடிக்கை பார்ப்போம் என சொல்லுகிறார். அவன் வழியிலேயே போய் நான் அவனை பார்த்துக்கிறேன் நான் ஏற்கனவே பிளான் போட்டுட்டேன் என சொல்லுகிறார். நீ அமைதியா இரு நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுநாள் காலையில் கிச்சனில் நந்தினி வேலை பார்த்துக் கொண்டிருக்க நம்ம வீட்டுக்கு ரெண்டு நாளா பேப்பர் வரல நான் போய் வாங்கிட்டு வந்ததுக்கு பெரிய ஐயா வேண்டான்னு சொல்லிட்டாரு என்னவா இருக்கும் என்று கேட்க அதெல்லாம் எனக்கு தெரியாது நம்ம வேலையை பார்க்கலாம் என்று சொல்லி வேலையை பார்க்கின்றனர்.
அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் ஆபீஸ்க்கு போகலையா என்று கேட்க, போகல இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கணும்னு தோணுச்சு நீங்களும் உங்க பையனும் போங்க ஏதாவது தேவைப்பட்டால் கூப்பிடுங்க நான் வரேன் என்று சொல்லுகிறார். சரி நம்ம போகலாம் என்று அருணாச்சலமும் சூர்யாவும் கிளம்பி விட காரில் அருணாச்சலம் நல்லவேளை உங்க அம்மா வரலன்னு சொல்லிட்டா என்று சொல்ல சூர்யா எனக்கு அதுல தான் சந்தேகமா இருக்கு அவங்க புயலே வந்தாலும் ஆபீஸ்க்கு வராம இருக்க மாட்டாங்க அவங்க அமைதியா இருக்காங்கன்னா ஏதோ ஒரு காரணம் இருக்கு என்று சொல்லுகிறார். அவங்களுக்கு நந்தினி ரிஜிஸ்ட்ரேஷன் பண்ண போற விஷயம் தெரிஞ்சிருக்குமோ என்று சொல்ல அப்படி எல்லாம் இருக்காது என அருணாச்சலம் சொல்லுகிறார்.
சுந்தரவல்லி வக்கீலுக்கு போன் போட்டு நான் சொல்றத அப்படியே டைப் பண்ணிக்கோங்க என் பேரு நந்தினி என ஆரம்பித்து நந்தினி வீட்டில் வேலை செய்த விஷயத்தையும் நந்தினிக்கு திருமணம் நடந்த விஷயத்தையும் சூர்யா தாலி கட்டிய விஷயத்தையும் இதனால் எனக்கு இந்த வீட்டில் வாழ விருப்பமில்லை எனவும் நந்தினி சொல்வது போல டைப் பண்ணி எடுத்துக்கிட்டு என்னோட வீட்டுக்கு வாங்க என்று சொல்லி கூப்பிடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி நந்தினியை கூப்பிட்டு உன்னோட சம்பள விவரம் எல்லாம் இதுல எழுதி இருக்கேன் என்று சொல்லி ஒரு பத்திரத்திலிருந்து கையெழுத்து கேட்க நந்தினியும் கையெழுத்து போடுகிறார். மறுபக்கம் சூரியா சுந்தரவல்லி இடம் அவள் என்னோட பொண்டாட்டி அவளை இந்த வீட்டுக்கு மகாராணியா நான் ஆக்கி காட்டுறேன் என சவால் விட சுந்தரவல்லி மாதவிடாய் பெருசா ஏதோ சாதிக்க போற மாதிரி பேசிக்கிட்டு இருக்கா அதுக்கு முன்னாடி தான் நான் பண்ணிட்டேன் இல்ல என்று சொல்ல இதுக்கப்புறம் என்ன பண்ண போறீங்க என்று மாதவி கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

