அஜித்தின் ‘AK64’ திரைப்படம் பற்றி, இயக்குநர் ஆதிக் அப்டேட்ஸ்..

‘தல’ அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வெற்றிக்கு பிறகு, ஆதிக் ரவிச்சந்திரனையே தன் அடுத்த பட இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளார் அஜித். இதனை ஆதிக் அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இப்படத்தை விநியோகஸ்தரான ராகுல் தயாரிப்பார் என கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் ஏகே64 படம் குறித்து தெரிவிக்கையில், ‘குட் பேட் அக்லி’ படம், அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம். ஆனால், ஏகே64 திரைப்படம் வித்தியாசமாக அனைவருக்குமான படமாக இருக்கும். ரசிகர்கள் ரசிக்கும்படியான ஒரு என்டர்டைனிங் படமாக ஏகே64 இருக்கும்’ என்றார்.
இதன்மூலம் ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து மாறுபட்ட ஒரு படமாக ஏகே64 படம் இருக்கும் என தெரிகிறது. மேலும், ஹார்பர் கதையம்சம் கொண்ட படமாகவும், அஜித்தின் ‘அட்டகாசம்’ படத்திற்கும் தொடர்பு இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தில் அஜித் கோட் எல்லாம் போட்டுகொண்டு செம ஸ்டைலிஷாக இருந்தார். ஆனால், ஏகே64 படத்தில் அஜித் முழுக்க முழுக்க வேஷ்டி சட்டையில் தான் வருவார் என்றெல்லாம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
‘குட் பேட் அக்லி’ படம், அஜித் ரசிகர்களை முழுமையாக திருப்தி படுத்தவேண்டும், ஒவ்வொரு காட்சியையும் கொண்டாட வேண்டும் என ஆதிக் உருவாக்கியிருந்தார். ஆனால், ஏகே64 படம் மாறுபட்ட ஒரு படமாக இருக்கவேண்டும் என முன்பே முடிவெடுத்துள்ளார் ஆதிக். எனவே, கண்டிப்பாக வித்தியாசமான கதைக்களம் மற்றும் கதாபாத்திரத்தில் தான் அஜித், தன் அடுத்த படத்தில் நடிப்பார் என உறுதியாக கணிக்கப்படுகின்றது.
படப்பிடிப்பு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் துவங்கும் எனவும், அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
