நயன்தாரா நடிப்பில் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ பட டீசர், வைரல்..

Web Ads

நயன்தாரா, நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் டீச வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஜார்ஜ் பிலிப்ராய் மற்றும் சந்தீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை வினீத் ஜெய்ன் மற்றும் நிவின் பாலி இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் நயன்தாரா, நிவின் பாலியுடன், புதுமுகங்கள் பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசரில், ‘உணவகத்தில் இருக்கும் நிவின் பாலியை விசாரிக்க, நயன்தாரா மஃப்டியில் வர.. அதிலிருந்து படத்தின் காட்சிகள் தொடங்கி மீண்டும் அங்கேயே வந்து முடிவது சிரிப்பலையை உருவாக்குகிறது. டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் காட்சிகள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக, நயன்தாரா மற்றும் நிவின் பாலியின் நடிப்பு ரசிக்கத்தக்கவையாக அமைந்துள்ளது.

நிவின் பாலியை விசாரிக்க வந்த லேடி போலீஸான நயன்தாரா, தனிப்பட்ட முறையில் பேசணும்னு சொல்ல, அவர் அருகே நிவின்பாலி வந்து அமர, ‘ஏன் மேல வந்து மடியில உட்கார வேண்டியது தானே’ என சொல்லும் காட்சிகள் காமெடி வடிவமைப்பாக உள்ளது.

சிபி மேத்யூ அலெக்ஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஜஸ்டின் வர்கீஸ் பின்னணி இசை அமைத்துள்ளார். ஆனந்த் சி.சந்திரன் மற்றும் ஷினோஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. படத்தின் டீஸர் தற்போது வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

dear students teaser nayanthara and nivin pauly movie anticipation
dear students teaser nayanthara and nivin pauly movie anticipation