காந்தாரா-3 படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்..

Web Ads

‘காந்தாரா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. அக்டோபர் 2-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளன.

இதனையும் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்துள்ளது.

’காந்தாரா’ படத்துக்கு முன் என்ன நடந்தது என்பதை தான் ‘காந்தாரா 2’ ஆக உருவாக்கி இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதனைத் தொடர்ந்து 3-ம் பாகம் உருவாக்கும் திட்டமும் வைத்திருக்கிறார். அதில், ‘காந்தாரா’ படத்துக்குப் பின் என்ன நடந்தது என சொல்ல திட்டமிட்டு இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜூனியர் என்.டி.ஆரிடம் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை ஜூனியர் என்.டி.ஆர் தரப்பும் மறுக்கவில்லை. இதனால், இந்த தகவல் உண்மையாக இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் தனது குடும்பத்தினருடன் கர்நாடகாவுக்கு சென்றிருந்தபோது, ரிஷப் ஷெட்டி தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

actor jr ntr joining the kantara film
actor jr ntr joining the kantara film