அபிநய்யின் மருத்துவச் செலவுக்கு, கேபிஒய் பாலா நிதியுதவி: உருக்கமான நிகழ்வு..

Web Ads

தனுஷ் ஹீரோவாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தவர் அபிநய். இவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக, விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தில் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்தவர் அபிநய் .

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த நிலையில், நலமுடன் இருந்த அபிநய்யின் வாழ்க்கை மாறிப்போனது. பட வாய்ப்புகள் கைநழுவி போனதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி இருந்தன. அதில் வயிறு வீங்கி, பார்ப்பதற்கு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தார். அவருக்கு கல்லீரல் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதற்காக மருத்துவ சிகிச்சை பெற போதிய வசதிகள் இல்லாமல் தவித்து வந்தார் அபிநய். இந்த தகவல் நடிகரும், விஜய் டிவி பிரபலமுமான கேபிஒய் பாலாவுக்கு தெரியவர, அவர் உடனடியாக அபிநய்யின் வீட்டுக்கே சென்று அவரை சந்தித்து, அவருக்கு பண உதவி செய்திருக்கிறார்.

மிகவும் சோர்வுடனே காட்சியளிக்கும் அபிநய், ‘சீக்கிரமா போய்டுவேன் பாலா’ என சொன்னதும் கலங்கிய பாலா, அவரைக் கட்டியணைத்து ஆறுதல் கூறினார். பின்னர், தனது பையில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை எடுத்து அபிநய்க்கு உதவி செய்திருக்கிறார். அந்தப் பணத்தை வாங்கியதும் பாலாவுக்கு நன்றி தெரிவித்து அவரை கட்டியணைத்துள்ளார் அபிநய்.

kpy bala timely help to actor abhinay

kpy bala timely help to actor abhinay