ஷாருக்கானுக்கு பலத்த காயம், ஆஸ்பத்திரியில் அனுமதி: படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு..

பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் நடிப்பில் ‘கிங்’ என்ற படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார்.
இப்படத்தில், ஷாருக்கானுடன் அவரது மகள் சுகானா கானும் நடிக்கிறார். ராணி முகர்ஜி சுகானாவின் தாயாராக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து கொண்டிருந்த நிலையில், படப்பிடிப்பில் காயமடைந்தார்.
ஒரு சண்டைக் காட்சியின்போது, இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது. ஷாருக்கான் டூப் இல்லாமல் நடித்ததாகவும், ரிஸ்க்கான ஸ்டண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ஷாருக்கான் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக பாலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. காயத்தின் தன்மை குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஷாருக்கானின் குழுவினரும் இந்த விபத்து பற்றி இதுவரை எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை.
ஷாருக்கானுக்கு ஏற்பட்டது பெரிய காயம் இல்லை, சிறிய காயம்தான் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷாருக்கான் குணமடைய ஒரு மாதத்திற்கு மேல் ஆகலாம் என்பதால் ‘கிங்’ படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் வரை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, ஷாருக்கான் நடிப்பில் ‘பதான்’ படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். ‘ஜவான்’ திரைப்படத்தை அட்லீ இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
