ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தின் ஹீரோ யார்?

Web Ads

சில தினங்களுக்கு முன்பு நடந்த ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ புத்தக விழாவில் கலந்துகொண்ட ஷங்கர் ‘வேள்பாரி’ கதையை படமாக எடுக்க ஆசைப்படுவதாக கூறினார். மேலும், எந்திரன் போல வேள்பாரி படமும் எனக்கு ஒரு கனவுப் படம் என்றார். அதற்கான வேலைகளில் தான் ஷங்கர் தற்போது இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்த, மறுபக்கம் பல கேள்விகளையும் ஆர்வமுடன் எழுப்பி வருகின்றனர். வேள்பாரி படத்தை தயாரிக்க முன்வரப்போவது யார்? ஹீரோவாக நடிக்கப்போவது யார்? எத்தனை பாகங்களாக உருவாகும்? என்பது போன்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.

மேலும், இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்காக சூர்யா மற்றும் விக்ரமிடம் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூட தகவல்கள் வந்தன. எனவே, சூர்யா அல்லது விக்ரம் ஆகியோரில் ஒருவர் வேள்பாரி படத்தில் ஹீரோவாக நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பிறகு சில காரணங்களால் சூர்யா வேள்பாரி படத்தில் நடிக்கமாட்டார் என்றும் சொல்லப்பட்டது.

சிவகார்த்திகேயனின் ரசிகர்களும், தங்களின் நாயகன் வேள்பாரி படத்தில் ஹீரோவாக நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்கின்றனர். மறுபக்கம் விக்ரம் ரசிகர்களும் சீயான் தான் வேள்பாரி படத்தில் நடிக்க சரியான தேர்வு என்கின்றனர். மேலும் ‘பாகுபலி’ படத்தில் நடித்த பிரபாஸ் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஷங்கரின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலாக இருக்கின்றனர்.

வேள்பாரி படம் இந்தியளவில் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் படமாகவும் இருக்கும் என்பதால், இப்பட வேலைகள் விரைவில் துவங்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொறுத்திருந்து பார்ப்போம்.

fans about director shankar in velpari movie hero choice

fans about director shankar in velpari movie hero choice