வடசென்னை-2, வாடிவாசல், மற்றும் சிம்புவுடன் கூட்டணி: வெற்றிமாறன் அப்டேட்ஸ்

Web Ads

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்து வலம் வருபவர் இயக்குனர் வெற்றி மாறன். தற்போதைய அவரது பிஸியான சூழலில் தெரிவிக்கையில்,

‘கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படம் பண்ணப்போறேன். அதை முடித்துக்கொண்டு வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஒரு படம் பண்ணனும். தனுஷ் தான் அப்படத்தின் ஹீரோ. எனவே தனுஷ் -வேல்ஸ் மற்றும் என்னுடைய காம்போவில் அடுத்ததாக ஒரு படம் உருவாகவுள்ளது.

சிம்பு படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக தனுஷை வைத்து வடசென்னை 2 படத்தை இயக்குகிறேன்’ என்றார்.

வடசென்னை திரைப்படம் 2018-ம் ஆண்டு வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பே, வடசென்னை இரண்டு பாகங்களாக தான் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து, இரண்டாம் பாதி விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், வெற்றிமாறன் அடுத்தடுத்து அசுரன், விடுதலை 1, விடுதலை 2 ஆகிய படங்களில் பிஸியாகிவிட்டார்.

ஒவ்வொருமுறை அவர் படங்கள் வெளியாகும்போதும், இல்லை அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியிலும் பேட்டியிலும் வடசென்னை 2 படம் எப்போது? என்பது தான் அவர் முன் வைக்கப்படும் கேள்வியாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பது சிம்பு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

director vetrimaaran movies updates