பாவாடை தாவணியில் வந்த விஜயா, உறைந்து போய் நின்ற குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

Web Ads

பாவாடை தாவனையில் விஜயாவை பார்த்து குடும்பத்தினர் உறைந்து போய் நின்றுள்ளனர்.

SiragadikkaAasai Serial Today Episode Update 20-06-25
SiragadikkaAasai Serial Today Episode Update 20-06-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து அண்ணாமலை, ரவி, ஸ்ருதி, என நால்வரும் டிவியை பார்த்து பேசிக்கொண்டு இருக்க மீனா காபி போட போகிறார் கொஞ்ச நேரத்தில் பாவாடை தாவணியில் விஜயாவும் பார்வதியும் வர முத்து அதிர்ச்சியாகி உறைந்து போய் உட்கார்ந்து இருக்க என்னாச்சு என்று அண்ணாமலை கேட்க அந்த பக்கம் பாருங்கப்பா என்று சொல்ல பிறகு மூவரும் திரும்பி பார்த்த அவர்களும் அதிர்ச்சியாக நிற்கின்றனர் கொஞ்ச நேரத்தில் மீனா காபியோடு வந்து இவர்களைப் பார்த்தவுடன் காப்பியை கீழே கொட்டி விடுகிறார்.

இப்ப எதுக்கு எல்லாரும் இப்படி பார்த்துக்கிட்டு இருக்கீங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது மனோஜ் ரோகினி வெளியில் வந்து எதுக்கு இப்ப சத்தமா இருக்கு காபி என் கொட்டி இருக்கீங்க என்று கேட்டுக்க கொஞ்சம் திரும்பி பாரு என்று சொல்ல மனோஜ் ரோகினி பார்த்து அவர்களும் அதிர்ச்சியாக நிற்கின்றனர். அண்ணாமலை இதெல்லாம் எதுக்கு விஜயா என்று கேட்க இது பிறந்தநாள் பார்ட்டிக்கு போடுற டிரஸ் கோட் ஒன்று சொல்ல அப்பா அம்மா உதவி செய்து போக வேணாம்னு சொல்லுப்பா தெருவில் நாய் அதிகமா இருக்கு என்று சொல்லுகிறார்.

ஆனால் விஜயா மீண்டும் உள்ளே சென்று ரோகிணி வாங்கி கொடுத்த நகையை போட்டு வந்து இப்போ இந்த டிரஸ்ஸுக்கு இது எப்படி மேட்ச் இருக்குல்ல என்ற கேட்க ரோகினி சூப்பரா இருக்கு ஆன்ட்டி என்று சொல்லுகிறார். அண்ணாமலை முத்துவிடம் என்னால் எல்லாம் தடுக்க முடியாது என்று சொல்லிவிட அவர்கள் கிளம்புகின்றனர்

முத்து மீனா விடம் நாளைக்கு கல்யாண விருந்து மாதிரி சாப்பாடு போடணும் என்று சொல்ல எதுக்காக என்று மீனா கேட்கிறார் சத்யா பாஸ் பண்ணதுக்கு தான் என்று சொல்ல எனக்கு நாளைக்கு காலைல கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லுகிறார். தெரிஞ்சவங்களுக்கு கல்யாண மாலை கொடுக்கணும் என்று சொல்ல வேற யார்கிட்டயாவது கொடு என்று சொல்லுகிறார் இல்ல நான் நேர்ல போகணும் என் தங்கச்சி மாதிரி என்று சொல்ல என்னமோ உன் தங்கச்சிக்கு கல்யாணம் என்ற மாதிரி சொல்ற சரி சீக்கிரம் போயிட்டு வா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் ஷோரூம் மேல் ரோகினி மனோஜிடம் கொடைக்கானலில் தாங்க ரூம் புக் பண்ணி இருக்கேன் நம்ம வெறும் டிராவல்ஸ் மட்டும் பாத்துக்கிட்டா போதும் மத்ததெல்லாம் தெரிஞ்சவங்க கிளைன்ட் மூலமா பண்ணிக்கோங்க என்று சொல்ல மனோஜ் அம்மாகிட்ட கேக்கலாமே என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து ரோகினிக்கு பார்சல் வர அதில் புடவை இருக்கிறது ஆன்டிக்காக தான் வாங்கணும் என்று சொல்லுகிறார். சரி இந்த புடவையை கொடுத்து அம்மா கிட்ட பேசி பார்ப்போம் என்று மனோஜ் சொல்ல,ஒரு கூட்டத்தை கூட இருக்கிற மாதிரியே இருக்கு நம்ம ரெண்டு பேரும் தனியா டைம் ஸ்பென்ட் பண்ணவே முடியல என்று சொல்ல சரி அம்மாகிட்ட பேசிட்டு போகலாம் என்று சொல்லுகிறார்.

கொஞ்ச நேரத்தில் ரோகினி அம்மா போன் பண்ண ரோகிணி வெளியில் வந்து பேசுகிறார் நல்ல விஷயம் இல்லாத கல்யாணி கிருஷ் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்து பாஸ் பண்ணி இருக்கான் என்று சொன்ன ரோகினி சந்தோஷப்படுகிறார். கிருஷ் வீட்டுக்கு வாம்மா என்று கூப்பிட சொல் வரேன் என்று ரோகினி சொல்லிவிட்டு போனை வைத்துவிட உடனே மனோஜ் இன்னைக்கு ஃபுல்லா நீ என் கூட தான் இருக்கணும் ரொம்ப நாள் கழிச்சு ஷோரூம் வந்திருக்கேன் என்று சொல்லிவிட ரோகினி வேறு வழியில்லாமல் இன்னைக்கு வர முடியாது என்று ரோகினி அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லுகிறார். விஜயாவும் பார்வதியும் சிந்தாமணியின் பிறந்தநாளுக்கு வீட்டுக்கு வருகின்றனர். சிந்தாமணியும் பாவாடை தாவணி கெட்டப்பில் இருக்கிறார்.

சிந்தாமணி என்ன சொல்லுகிறார்? அதற்கு விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 20-06-25
SiragadikkaAasai Serial Today Episode Update 20-06-25