ஆறு வருடங்களுக்கு ஆறு தரமான படம்.. அஜித் சொன்ன சூப்பர் தகவல், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Web Ads

ஆறு வருடங்களுக்கு ஆறு தரமான படம் வெளியாகும் என்று அஜித் பேசியுள்ளார்.

ajithkumar upcoming movie update

ajithkumar upcoming movie update

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் மாஸ் காட்டி மிகப்பெரிய வெற்றி அடைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியாகும் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அஜித் தற்போது கார் ரேஸில் பிஸியாக இருந்து வருகிறார்.

Web Ad 2

தற்போது சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டுகளை கூறியுள்ளார். அதாவது நவம்பர் மாதத்தில் இருந்து அடுத்த படத்தில் நடிக்க தொடங்குவேன் அந்த திரைப்படம் சம்மரில் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.இது மட்டுமில்லாமல் ஒரே நேரத்தில் ரேசிங் மற்றும் படங்களில் நடித்தால் இரண்டுமே ஜஸ்டிஸ் என்னால் செய்ய முடியாது என்பதை தெரிந்து ரேசிங் சீசனில் நடிக்காமல் இருப்பது தான் கான்சென்ட்ரேட் செய்ய சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் என்னை போலவே நினைக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் கிடைத்திருப்பதால் அடுத்த ஆறு வருடங்களுக்கு நீங்கள் ஒவ்வொரு வருடமும் சிறந்த தரமான படங்களை பார்க்க போகிறீர்கள் என்று அஜித் கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு அஜித் ரசிகர்கள் இடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ajithkumar upcoming movie update

ajithkumar upcoming movie update