பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!!

Web Ads

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!!

Do you know the release date of Bison Here is the official notification.!!
Do you know the release date of Bison Here is the official notification.!!

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பரியேறும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ் அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன்,வாழை போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருகிறார்.

இவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் பைசன் இந்த படத்தில் துருவ்விக்ரமுக்கு ஜோடியாக அனுபவமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதையாக இந்த திரைப்படம் உருவாகி இருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

ஏற்கனவே நேற்று இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6:00 மணிக்கு வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது போஸ்டருடன் ரிலீஸ் தேதியை வெளியிட்டு உள்ளனர்.

அதாவது மாரி செல்வராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தீப்பிடித்து எறியும் வானத்திற்குள் இருந்து தீப்பிழம்பாய் தீபாவளிக்கு வருகிறான் தெக்கத்தி காளாமாடன் (பைசன்) என்று பதிவிட்டு அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.