‘தல’ அஜித் குறித்து, இயக்குனர் சுந்தர்.சி நெகிழ்ச்சி பேச்சு

Web Ads

‘கேங்கர்ஸ்’ ரிலீஸாவதை முன்னிட்டு, சுந்தர்.சி அஜித்குமாருடன் பணிபுரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..

வரும் ஏப்ரல் 24-ம் தேதி சுந்தர். சி இயக்கி நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் சுந்தர். சி.யுடன் வடிவேலு இணைந்துள்ளார். கேத்தரின் தெரசா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில், பொரொமோஷன் நிகழ்ச்சியில் சந்தர்.சி கூறியதாவது:

என் கூட அஜித்குமார் படம் பண்ணும்போது அவர் ‘தல’ என்கிற ரேஞ்சை அடையவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தருணம். அப்போதே அவருக்கு முதுகில் ஆபரேஷன் நடந்திருந்த நிலையில், அவரால் நார்மலா காலை தரையில் ஊன்றி மற்றவர்களை போல நடக்க முடியாது.

ஒரு கால கீழே வைத்திருக்கிறோமா என்பதை அறிந்துகொள்ள அவர் கால்களை அடிக்கடி பார்த்துக் கொள்ளும் அளவுக்கு உடல் நலம் இருந்தாலும், ஆக்‌ஷன் காட்சிகள், நடன காட்சிகள் என அனைத்திலும் நடித்து எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார்.

Web Ad 2

இன்றைக்கும் அஜித் குமாரின் கடுமையான உழைப்பு வியக்க வைக்கிறது’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ‘தல’ ரசிகர்களின் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

முன்னதாக, மத கஜ ராஜா, குடும்பஸ்தன், டிராகன் மற்றும் குட் பேட் அக்லி படங்கள் தியேட்டர்களில் வசூலை வாரிக் குவிக்கின்றன. அவ்வகையில், கேங்கர்ஸ் படமும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ganders movie function in director sundar c speech