அயலான் திரைப்படம் எட்டு நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படம் அயலான்.
ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்த நிலையில் 8 நாளில் ரூ 65 கோடி வரை வசூலை பெற்றிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த வாரமும் விடுமுறை நாட்கள் இருப்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.