கமல், தனுஷ் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய நினைவுகள்; வைரல்..

சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி வருகிறது. அது பற்றிப் பார்ப்போம்..

70-வது பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.

இதில் அமரன் திரைப்படத்திற்காக முதன்மை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதை சிவகார்த்திகேயன் பெற்றார். விருது வாங்கிய பிறகு சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில்,

’13 ஆண்டுகளுக்கு முன் பிலிம்ஃபேர் நிகழ்ச்சிக்கு தனுஷ் சாருடன் வந்திருந்தேன். ஜாலியாக சென்று வருவோம் என தனுஷ் என்னை அழைத்து வந்திருந்தார். அப்போது இரண்டாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது. அங்கிருந்து முதல் வரிசையில் இடம் கிடைக்க எனக்கு 13 ஆண்டுகள் ஆனது.

அமரன் படத்திற்காக ஒப்பந்தம் செய்யும் போது, கமல்ஹாசன் சார் அலுவலகத்தில் நிறைய விருதுகள் இருந்தன. அப்போது அவர், ‘எனக்கு இது போதும் இனி இளம் திறமைசாலிகள் விருது பெற வேண்டும்’ என்று கூறினார்.

அப்போது எனக்கு அமரன் திரைப்படத்திற்காக இந்த விருது கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். அது தற்போது நடந்திருக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் கதை தான் இந்த விருது கிடைக்க முக்கிய காரணம். என்னை எவ்வளவு அடித்து, தூக்கி வீசினாலும், தொடர்ந்து என்னை தூக்கி பிடிப்பது என் ரசிகர்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவா அண்ணா இன்று பிலிம்ஃபேர் விருதுடன் நிற்கிறேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

70 filmfare awards and best actor sivakarthikeyan
70 filmfare awards and best actor sivakarthikeyan