5 Chiranjeevi Of Mahabharatham
5 Chiranjeevi Of Mahabharatham

மகாபாரத போருக்கு பிறகு இன்று வரை உயிருடன் இருந்து வரும் ஐந்து நபர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

5 Chiranjeevi Of Mahabharatham : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் உலக மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏற்கனவே வெளியான இந்தத் தொடர் மறு ஒளிபரப்பிலும் மாபெரும் வெற்றி பெற்று இருப்பதே இதற்குச் சான்று.

நம்முடைய வலைதள பக்கத்திலும் தினந்தோறும் மகாபாரதம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று மகாபாரதப் போருக்குப் பிறகு தற்போது வரை உயிரோடு இருக்கும் ஐந்து நபர்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

  1. கிருபாச்சாரியார்

சந்தனு மகாராஜா தத்தெடுத்து வளர்த்தவர் தான் கிருபாச்சாரியார். இவரின் தங்கையை தான் துரோணாச்சாரியார் திருமணம் செய்து கொண்டார். அதாவது அஸ்வத்தாமனின் தாய் மாமன் தான் கிருபாச்சாரியார்.

பாண்டவர்கள், கௌரவர்கள் என இருவரும் சிறு வயதினர் ஆக இருந்த போது அவர்களுக்கான வித்தைகளை கிருபாச்சாரியார் தான் கற்றுக் கொடுத்தார். அதன் பின்னர் தான் இவர்கள் துரோணாச்சாரியாரியாரிடம் மேலும் வித்தைகளை கற்றனர்.

முதல் நாளில் ரஜினி படத்திற்கு இணையாக மாஸ் காட்டிய அஜித், ஒரே தியேட்டரில் 100 காட்சி – ஆனால் படம் பிளாப், என்ன படம் தெரியுமா?

குருச்சேத்திரப் போரில் கௌரவர்களுக்கு ஆதரவாக போரிட்ட இவர் இன்று வரை உயிரோடு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஒரே நேரத்தில் 60 ஆயிரம் பேரை கொன்று குவிக்கும் ஆற்றலை கொண்டவர்.

  1. அஸ்வத்தாமன் :

கிருபாச்சாரியார் மருமகன் அஸ்வத்தாமனும் கிருஷ்ணர் அளித்த சாபத்தின் காரணமாக இன்று வரை உயிரோடு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

  1. அனுமன் :

எனது மகாபாரதத்தில் அனுமனா என நீங்கள் கேட்கலாம். ஆனால் உண்மையில் ராமாயணத்தைப் போலவே மகாபாரதத்திலும் அனுமனுக்கு ஒரு பங்கு உண்டு. பாண்டவர்களுக்கு அனுமன் மகாபாரதத்தில் இன்றைய உதவிகளை செய்துள்ளார். குறிப்பாக பாண்டவர்கள் வனவாசத்தின் போது பீமனுக்கு அறிவுரை வழங்கி பலத்தையும் வழங்கி இருந்தவர் அனுமன் தான். அதேபோல் போரில் அர்ஜுனன் தேர் மீதும் அனுமன் கொடியாக அமர்ந்து காப்பாற்றுவார்.

  1. வியாசர் :

மகாபாரதத்தை நூலாக எழுதிய வியாசரும் இன்று வரை உயிரோடு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் சொன்ன சொன்ன விநாயகர்தான் மகாபாரதத்தை எழுதியதாகவும் கூறப்பட்டு வருகிறது.

  1. பரசுராமர் :

21 தலைமுறை ஷத்திரிய வம்சத்தை அழிப்பதற்காகவும் கலியுகத்தில் கல்கியாக பிறப்பவர்களுக்கு உதவுவதற்காகவும் இன்று வரை உயிரோடு சிரஞ்சீவியாக வாழ்ந்து வருவதாக கூரப்பட்டு வருகிறது.