4G Internet in Jammu Kashmir
4G Internet in Jammu Kashmir

4G Internet in Jammu Kashmir : ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆகஸ்ட் 15க்கு பிறகு சோதனை இரு மாவட்டங்களில் மட்டும் இணைய சேவையை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மற்றும் அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அதிவேக இணைய சேவை தடைசெய்யப்பட்டது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 4G இணைய சேவையை மீண்டும் அளிக்க வலியுறுத்தி ஊடக “நிபுணர்களான அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்பு” சார்பில் உச்சநீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியங்களில் தலா ஒரு மாவட்டத்தில் மட்டும் சோதனை அடிப்படையில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு 4G இணைய சேவையை மீண்டும் அனுமதிக்க சிறப்பு குழு முடிவு செய்திருந்தது.

பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த சோதனை நடைமுறையை மீண்டும் மறு ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.