41000 People Returned TN in Lockdown
41000 People Returned TN in Lockdown

மத்திய அரசின் வந்தே பாரத திட்டத்தின் கீழ் இதுவரை 41,460-க்கும் அதிகமானோர் பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

41000 People Returned TN in Lockdown : சீனாவின் ஹூகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கி வருகிறது.

மேலும் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்தவர்களை இந்தியா கொண்டுவர மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.

இந்த திட்டத்தின் மூலமாக இதுவரை லட்சக்கணக்கான மக்கள் இந்தியா திரும்பியுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து 41,460 பேர் தமிழர்கள் விமானங்கள் மூலமாக தமிழகம் திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை வரை 134 விமானங்கள் மூலமாக 19,668 பேர் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கி உள்ளனர்.

77 விமானங்கள் மூலமாக திருச்சி விமான நிலையத்தில் 12,820 பேர் வந்தடைந்துள்ளனர்.

29 விமானங்கள் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு 4,864 பேர் தமிழகம் வந்தடைந்துள்ளனர்.

21 விமானங்கள் மூலமாக கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு 3,562 பேர் தமிழகத்திற்கு வந்தடைந்துள்ளனர்.

இந்த லாக் டவுனில் தமிழகம் வந்தடைந்தவர்களில் மொத்தம் 67 சதவீதம் பேர் ஆண்கள் எனவும் 31 சதவீதம் பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் சிறியவர்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

இவர்களுக்கு பரிசோதனை நடத்தியதில் 751 பேர் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் 562 பேர் சென்னை விமான நிலையத்தில் பாசிட்டிவ் என உறுதியானவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஓமான், கத்தார், ஷார்ஜா மற்றும் குவைத் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 873 இந்தியர்கள் புதன்கிழமை இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். முதல் விமானம் மஸ்கட்டில் இருந்து ஒரு தனியார் நிறுவனத்தின் 183 ஊழியர்களுடன் புதன்கிழமை மாலை வந்தது. பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் ஹோட்டல்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் கட்டாரில் இருந்து ஒரு சிறப்பு விமானம் எட்டு குழந்தைகள் உட்பட 177 இந்தியர்களுடன் வந்தது. கோவிட் -19 சோதனையை முடித்த பின்னர், 114 பயணிகள் இலவச தங்குமிடத்தை தேர்வு செய்தனர், மீதமுள்ளவர்கள் ஹோட்டல்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இரவின் பிற்பகுதியில், சர்ஜா மற்றும் குவைத்திலிருந்து ஒரு சிறப்பு விமானம் முறையே 181 மற்றும் 173 இந்தியர்களுடன் வந்தது. அதிகாலையில், சர்ஜாவிலிருந்து ஒரு சிறப்பு விமானம் 159 பேருடன் வந்தது.

சோதனைக்குப் பிறகு, அவர்களில் 101 பேர் இலவச தங்குமிடத்தைத் தேர்ந்தெடுத்தனர், 55 பேர் ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் எனவும் சென்னை விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.