
ஜெயிலர் படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் குறித்து தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ஜெயிலர்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான இந்த படத்தில் மோகன் லால் சிவராஜ் குமார் என பல முன்னணி நடிகர்கள் ஸ்பெஷல் ரோலில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
முதல் நாளில் 96 கோடி வசூல் இரண்டே நாளில் 150 கோடி வசூல் என தொடர்ந்து மிரட்டி வரும் இந்த படம் மூன்று நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆமாம் மூன்று நாள் முடிவில் இந்த படம் 200 கோடியை தாண்டி மொத்தமாக 210 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் டாப் 10 படங்கள் லிஸ்ட்டில் ஜெயிலர் திரைப்படம் முதல் இடத்தை பிடித்து வசூல் வேட்டை ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.