Viswasam Ajith
2019-ல் மறக்க / மறுக்க முடியாத அஜித்தின் நினைவுகளை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இந்த 2019 ஒரு பொற்காலம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு நல்ல லாபம் கொடுத்த படங்களும் சிறந்த படங்களும் வெளியாகி தமிழ் சினிமாவின் மதிப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

2019-ல் தல அஜித்தின் விஸ்வாசம் படம் தான் அனைத்து தரப்பினருக்கும் அதிக லாபம் கொடுத்த திரைப்படமாக அமைந்தது. அதன் பின்னர் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதனையெல்லாம் கொண்டாடி வரும் விதமாக நேற்று சமூக வளையதளங்களில் #2019MemoriesOfTHALA என்ற ஹேஸ்டேக்கில் அஜித் ரசிகர்கள் அஜித்தின் மறக்க முடியாத நினைவுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.