2 Point O Release Issue

2 Point O Release Issue : 2 பாயிண்ட் ஓ இறுதி நேரத்தில் சிக்கலில் சிக்கி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதனால் படம் நாளை சொன்னபடி ரிலீஸாகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 2 பாயிண்ட் ஓ.

ஷங்கர் இயக்க லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் நாளை முதல் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் மொபைல் போன்களால் ஆபத்து என பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.

இதனால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என Cellular Operators Association of India (COAI) என்ற நிறுவனம் Ministry of Information & Broadcasting என்ற அமைப்பிற்கு கோரிக்கை வைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சென்சார் போர்டு அளித்திருந்த சான்றிதழையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனால் இந்த பிரச்சனையில் தீர்வு என்ன கிடைக்கும்? படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி அளிப்பார்களா? இல்லையா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here